Pedestrian Safety Law

 Responsible Citizens iYakkam has submitted a petition to The Tamil Nadu Government Online for enacting a law to ensure Safety of Pedestrian on Roads.

பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசிடம் இணையதளத்தின் மூலமாக "பாதசாரி  பாதுகாப்பு சட்டம்" கோரி பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம்  சார்பாக நேற்று மனு அளித்து உள்ளோம் .


தமிழ்நாட்டின் சாலைகளில் பாதசாரிகளுக்கு பாதுகாப்பிற்கு சட்டம் தேவை :

மிகப் பெரும்பான்மையான சாலைகளில் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு எந்தவொரு வசதியும் சிக்னலும் இருப்பதில்லை. சாலைகள் வண்டிகளுக்காக மட்டும் என்றளவில் தான் வடிவமைக்கபடுகின்றன. 

சாலைகளில் மிக அதிகமாக பயன்படுத்துபவர்களும், மிக குறைந்த இடத்தை மட்டுமே ஆக்கிரமிப்பவரும், சுற்றுச் சூழலை மாசுபடுத்தாதவருமான பாதசாரிக்கு சாலைகளில் எந்த மரியாதையும் இல்லை. பாதசாரிகளின் உயிருக்கு எந்த நேரத்திலும் வண்டிகளால் ஆபத்துகள் ஏற்படுத்தபட்ட வண்ணம் உள்ளது.

காற்றை மாசுபடுத்தும், ஒலி மாசு ஏற்படுத்தும், இட நெருக்கடி உண்டாகும் வண்டிகளுக்கு அரசாங்கம் கோடி கோடியாக செலவழித்து மேம்பாலங்கள், அகல சாலைகள் கட்டுகின்றன. ஆனால் எப்பொதும் பேருந்துகளையும், இரயில்களையும் நம்பும் பாதசாரிகளையும் சில ஆயிரங்களை செலவழிப்பதில்லை.

இந்த சூழ்நிலையில் "பாதசாரிகள் பாதுகாப்பு சட்டம்" அரசாங்கம்  இயற்ற வேண்டும்.

1. சாலையில் பாதசாரிகளுக்கே முன்னுரிமை

2. ஒவ்வொரு முக்கிய சாலைகளிலும்  ஒவ்வொரு 100 மீட்டருக்கு இடையிலும்  சாலையை கடக்க 3டி தொழில் நுட்பத்தில் வரைந்த "ஜீப்ரா கிராஸிங்க்" இருக்க வேண்டும். சாலையின் இரு மருங்கிலும் வண்டிகளுக்கு எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். 

3. சாலையில் நடக்க நல்ல அகலமான பாதசாரிகளுக்கு நடைபாதை ( கடைகளோ / வண்டி ஓட்டிகள் வரமுடுயாத வண்ணம் ) வேண்டும்

4.  ஒவ்வொரு சிக்னலிலும் வண்டிகளுக்கு இரண்டு நிமிடம் ஒதிக்கினால் பாதசாரிகள் சாலையை கடக்க 30 நொடிகள் ஒதுக்க வேண்டும்.

5. மாற்று திறனாளி பாதசாரிகளையும் கருத்தில் கொண்டு, ப்ரைல் முறையிலும் & ஒலி அறிவிப்பு முறையிலும் பாதசாரிகளுக்கான அறிவிப்பு இருக்க வேண்டும்.  சாலை கடக்கும் இடங்களில் சக்கர நாற்காலிகளில் வருவபவர்களும் பிறர் உதவியின்றி சாலையை கடக்கும் அளவிற்கு வசதிகள் இருக்க வேண்டும்.

6.  இது போன்ற சேவைகள் அனைத்தும் ஏற்கனவே உள்ள தேசிய. மாநில நெடுஞ்சாலைகள் உட்பட அனைத்து பிரதான சாலைகளிலும் ஏற்படுத்தவேண்டும்.

7. போக்குவரத்து காவல் துறை நிலையங்கள் அனைத்திலும் பாதசாரிகளின் புகார்கள் மற்றும் ஆலோசனைகளை  இணையத்தளத்தில் பகிரும் வண்ணம் அமைக்க வேண்டும்.  ஒவ்வொரு நிலையமும் அவர்கள் எல்லைகுட்பட்ட பகுதியில் பாதசாரிகளுக்கு மாதா மாதம் எத்தனை விபத்துகள், காயங்கள் , இறப்புகள் ஏற்பட்டன என்று வெளியிட வேண்டும்.

ஒரு நாட்டில் பாதசாரிகள் எந்த அளவிற்கு பாதுகாப்பாக உணர்கிறார்களோ அந்தளவே அந்த நாட்டின் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதற்கு அடையாளம். 

பாதசாரிகளுக்கு பாதுகாப்பு கூடக் கூட தனியார் வண்டிகளின் எண்ணிக்கை குறைந்து விடும் பொது பேருந்துகள், இரயில்களின் சேவைகள் கூட சாலையில் வண்டிகளின் நெரிசல்கள் குறைந்து விபத்துகள் குறையும்.  இதற்கு "பாதசாரிகள் பாதுகாப்பு சட்டம்" கொண்டு வந்து தமிழ்நாடு மிகப் முன்னோடி பொறுப்புள்ள மாநிலமாக மாற  வேண்டும் என்று பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

Pedestrians First

Comments

  1. பாத சாரிகளுக்கு அருமையான சட்ட முன்வரைவு வாழ்த்துக்கள்..,👍👍👍

    ReplyDelete
  2. நல்ல ஆலோசனை.

    ReplyDelete
  3. அருமை ஜி வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment