We in India, always would like to copy from western countries of their culture and life style. We copied their high speed traveling in high end cars, tearing of the jeans, eating Pizzas, drinking colas & vodkas but are forgetting the fundamental road behavior of respecting pedestrians practiced in western countries.
இந்தியர்களின் மிகப் பெரிய பலவீனம் பல பழக்க வழக்கங்களில் மேற்கத்திய நாடுகளை காப்பி அடிப்பது. அவர்களைப் போல் ஜீன்ஸ் பேன்டை கிழித்துவிட்டு போட்டு கொள்வதிலும், பீட்சா சாப்பிடுவது, ஆடம்பர அகலமான கார்களை பயன்படுத்துவது, கோலாக்களையும் வோட்காகளையும் குடிப்பது போன்ற பல அவசியமற்ற வழக்கங்களை பின்பற்றுவதும், ஆனால் மேற்கத்திய நாட்டினரை போல் பாதசாரிகளை மதிக்கும் பண்பை தான் நாம் முக்கியமாக காப்பி அடிக்க வேண்டும்.
In some countries , where Vehicles could be driven at very high speed even up to 200 Kmph, but they also stop for pedestrians and will start the vehicle only when the pedestrian crosses fully to the other side of the road.
சில வெளிநாடுகளில் வண்டிகளை 200 கிமீ / மணி நேரம் செலுத்த வசதிகள் இருந்தும் , அதே சமயம் அவர்கள் பாதசாரிகள் சாலையை கடக்கும் போது சாலையின் மறுபக்கம் சென்று சேரும் வரை வாகனங்களை ஒரு இன்ச் கூட நகர்துவதில்லை.
This article gives account of the practices in UK, where vehicle drivers are fined even if they move an inch from their position when pedestrians are crossing the road.
மேலே கொடுத்துள்ள லிங்கில் உள்ள பத்திரிக்கை செய்தியில் பிரித்தானிய நாட்டில் கார் ஓட்டிகள் பாதசாரிகள் சாலையை கடக்க நிற்கும் போது வண்டியை நிறுத்தாவிட்டால் எத்தகைய அபராதங்கள் விதிக்கப்படும் என்று விளக்கியுள்ளார்கள்.
We realized that pedestrians are adjusting to all the adversaries thrown at them and getting used to the neglect to their safety from all types of vehicle users. Most of the vehicle owners feel pedestrians as nuisance on the road. Psychologically Pedestrians are treated with disdain by vehicle drivers and bureaucrats and it is forcing many pedestrians to buy vehicles to get some respect from motorists.
In Indian Roads, Pedestrians who are the majority of the road users are the most neglected and least respected entities of road.
இந்திய சாலைகளில், சாலை பயன்படுத்துபவர்களில், எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்தும் மிகவும் அவமதிக்கப்படுவதும் அலட்சியபடுத்துவடுவதும் பாதசாரிகளே.
Highways Department , Chennai Corporation and Chennai Traffic Police is happy conducting one week, Road safety week programme, every year. But in reality, all the 365 days, pedestrians are not given any facilities to use the road and are subjected to inhumane conditions. 99% of the road does not have safe pedestrian walking path on either side of the road. Most of the traffic signals does not have any provision for pedestrian crossing. Even those that have a pedestrian crossing, pedestrian are given only 10 secs to cross the road, which even a normally abled individual is not able to cross. Differently abled pedestrians are facing much more hardships.
நெடுஞ்சாலை துறை, சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவலதுறை வருடத்திற்கு ஒரு முறை சாலை பாதுகாப்பு வாரம் நடத்துகிறார்கள். ஆனால் பாதசாரிகளுக்கு வருடம் முழுவதும் சாலையில் நடக்க வசதிகளோ, அவகாசமோ வழங்கப்படுவதில்லை. இங்கு இயங்கும் பெரும்பாலான போக்குவரத்து சிக்னல்களில் பாதசாரிக்கு என்று சிக்னல்கள் இருப்பதில்லை. இருக்கும் சில இடங்களிலும் 10 நொடி மட்டுமே வழங்கப்படுகிறது. பத்து நொடிகளுக்குள் உடல் வலிமை மிக்கவர்களால் கூட சாலையை கடக்க முடியாது, இந்த சூழலில் மாற்று திறனாளிகளின் நிலைமையை பற்றி சிந்திப்பதே இல்லை.
We at, Responsible Citizens iYakkam, conducted a pedestrian safety campaign in the Velachery Tambaram Road on 15th April 2023 to create awareness about the need to ensure safety of pedestrians.
15.4.2023 அன்று வேள்ச்சேரியில் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் சார்பாக "பாதசாரிகள் பாதுகாப்பு விழிப்புணர்ச்சி" ஏற்படுத்தத ஒரு முயற்சி எடுத்தோம். 
பாதசாரிகள் பலவித ஆபத்துகளுக்கு இடையில், வண்டி ஓட்டிகளின் அலட்சிய மனநிலையின் நடுவே சாலையை பயன்படுத்துகிறார்கள் என்று நேரடியாக களத்திலே உணர்ந்தோம். பல வண்டி ஓட்டிகளும் பாதசாரியை ஒரு இம்சையாகவே பார்க்கின்றனர். அரசாங்க அதிகாரிகளும் வண்டி ஓட்டிகளின் தொடரும் அலட்சியத்தால் மனம் நோகும் பாதசாரிகள் சாலையில் மரியாதை பெறுவதற்காகவாவது தவண முறையில் கடன்பட்டு வண்டிகள் வாங்கி அவதிப்படுகின்றனர்.
When we uploaded the video of pedestrian plight https://youtu.be/wJfkRqx5L1M and shared it with many of our friends, Some of our friends from abroad commented that in their country, even before attempting the driving test, The licensing authority gives a reference manual on various aspects of driving and importantly how the driver should respect pedestrians.
நாங்கள் எடுத்த பாதசாரிகள் சந்திக்கும் சவால்களை பற்றிய வீடியோக்களின் தொகுப்பை பல நண்பர்களிடமும் பகிர்ந்தோம். சில வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் இந்திய நாட்டில் பாதசாரிகளின் அவல நிலையை கண்டு மனம் நொந்து அவர்கள் வசிக்கும் நாடுகளில் எந்த அளவிற்கு பாதசாரிகள் மதிக்கப்படுகிறார்கள், அவர்கள் நாடுகளில் சாலையில் வண்டி எடுக்கும் முன்னே எத்தனை கட்டங்களில் பயிற்சி மற்றும் சோதனைகள் உள்ளன என்று விளக்கினர். லைசன்ஸ் பெறுவதற்கு முன் ஒரு வாகன ஓட்டிக்கு என்னவெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று மிக தெளிவாக லைசன்ஸ் வழங்கும் துறையின் அலுவலகத்திலும் இணைய தளத்திலும் தெள்ளத் தெளிவாக அடிப்படை தகுதிகளை பட்டியில் இட்டனர்.
Here is a sample in Victoria State in Australia
https://www.vicroads.vic.gov.au/licences/your-ls/your-learner-handbooks ஆஸ்திரேலியா நாட்டில் விக்டோரியா மாநிலத்தில் பயிற்சி ஓட்டுனருக்கே எத்தகைய வழிக்காட்டுதல்கள் வழங்கப்படுகின்றன என்பதை அவர்களின் வலைதளத்தை நம்மோடு பகிர்ந்து உள்ளனர்.
Till This 2023, in India, none of the central or state driving license authorities are giving any preparation manual on driving on roads and there is no reference on how to respect and give way pedestrians on Road.
2023ல் கூட, இன்னமும் இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் சாலையில் வண்டி ஓட்ட என்னவெல்லாம் தகுதிகள் தேவை, அந்த திறனை பெறுவதற்கான நடைமுறைகள் லைசென்ஸ் பெற வருபவர்களுக்கு வழங்கபடுவதில்லை, எந்த தெளிவும் இல்லாமல் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. பாதசாரிகளுக்கு என்று எந்த வழிக்காட்டுதலும் இல்லை அவர்களின் முக்கியதுவத்தை பற்றியும் எந்த வாகன ஓட்டிகளுக்கும் எந்த அறிவுறுத்தலும் இல்லை.
In India, all the latest models of all major car brands are available in Market. Most of the Indians owning these high end cars wants to ride at the speed, it is being driven at speed in western countries, but important difference, while travelling in western countries' roads even at high speed the passenger feels more safer as there is no sudden breaks, no yelling at crossing pedestrians. Whereas in India, with its high density population, without much safe passage for pedestrians to cross, allowing high speed machines on Indian roads are leading to more accidents and deaths at very high frequency.
( Please read this article too : https://pedestrian-first-campaign.blogspot.com/2022/12/ban-mishap-pants.html இந்த கட்டுரையையும் படியுங்களேன்)
இந்தியாவில் உலகத்தில் கிடைக்கும் அனைத்து ரக கார்கள் பல நிறுவன தயாரிப்புகளும் எளிதாக கிடைக்கின்றது. பல இந்தியர்களுக்கும் வெளிநாடுகளில் ஓட்டும் வேகத்தில் கார் இயக்க வேண்டும் என்ற வெறி இருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் அதிவேகத்தில் பயணித்தாலும் பயணி எந்த ஆபத்தையும் உணறுவதில்லை ஏனென்றால் அந்த நாடுகளில் திடீரென்று வண்டியை நிறுத்த வேண்டிய அவசியம் மிக குறைவு, பாதாசாரிகளை பார்த்து திட்ட வேண்டிய அவசியமும் இல்லை. உலகின் மிக அதிக மக்கள் தொகை உடைய, அதிக மக்கள் அடர்த்தி உள்ள நமது நாட்டில் பொறுப்பில்லாதவர்களிடம் அதிக வேகமாக பயனிக்க கூடிய வாகனங்களை பயன் படுத்த அனுமதிப்பதால் இங்கு வாகன விபத்துகளும் சாலையில் மரணங்களும் மிக அதிகம்.
Even an aircraft which can even touch a top speed of 800 kms / hour, is being driven at 30 Kmph speed till reaches the runway. Pilots are required to undergo lots of training and tests before they could sit in the cockpit. Even such a big vehicle too maintains a speed according to the ground situation. But in Indian roads, Vehicles drivers are not being given any such training or no need to undergo rigorous testing before touching the wheel. They are literally touching very high speeds even in narrow lanes & the authorities are allowing such high speed vehicles in to untrained hands.
800 கிமீ / மணி வேகத்தில் பறக்கக் கூடிய விமானம் கூட விமான ஓடு தளம் வரை செல்வதற்கு 30 கிமீ வேகத்தில் தான் செலுத்தப்படுகிறது. எந்த இடத்தில் எந்த வேகத்தில் செல்ல வேண்டும் என்பதற்கு விமானிக்கு பல மடங்கு பயிற்சிகள், பல சோதனைகள் கடந்த பிறகு தான் விமானத்தை ஓட்ட அனுமதிக்க படுகிறார்கள். ஆனால் இந்திய சாலைகளிலோ , வாகன ஓட்டிகளுக்கு எந்த விதமான பயிற்சிகளோ சோதனைகளோ வண்டிகள் ஓட்டபடுவதற்கு வழங்கப்படுவதில்லை. மிக குறுகிய சந்துகளில் கூட மிக அதிக வேகத்தில் வண்டிகளை செலுத்த அரசு அதிகாரிகளே பல அதி வேக வண்டிகளை விறபதற்கு அனுமதிப்பதன் மூலமாக வழங்கிவிடுகிறார்கள்.
If we want to copy west, Let us be responsible on roads for our lives and others lives. India should invest on skill development for all road users including pedestrians. Government should invest in infrastructure to encourage more public transports than private vehicles and encourage more citizens to become pedestrians, even to fight climate change.
நாம் மேற்கத்திய நாகரீகத்தை தான் காப்பி அடிக்க வேண்டும் என்றால், முதலில் நாம் நமது உயிருக்கும் பிறரது உயிர்களுக்கும் பொறுப்பெடுத்து கொள்வதை ஒரு கலாசாரமாக ஆக்குவோம். சாலைகளில் பாதசாரிகளின் எண்ணிக்கையை கூட்ட பாதசாரிகளுக்கு சாலைகளில் பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். பொது போக்குவரத்து வாகனங்களை அதிகரிக்கத்தான் முயல வேண்டும்.
பருவ நிலை மாற்றத்தை குறைக்க பாதசாரிகளின் எண்ணிக்கையை கூட்ட வேண்டும்.
Increasing the numbers of Pedestrians increases the health of the country , reduces pollution and will reduce accidents and will increase safety for all in roads.
பாதசாரிகளின் எண்ணிக்கை கூட கூட நாட்டின் ஆரோக்கியம் கூடும், மாசு குறையும், விபத்துகள் குறையும் மற்றும் அனைவரின் சாலை பாதுகாப்பும் கூடும்.
Politicians, Bureaucrats, All courts Judges should make it mandatory for themselves to become a Pedestrian at least one day in a week to know the ground situation and change the scenario.
அரசியல்வாதிகள், அதிகாரிகள், அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகள் வாரத்தில் ஒரு நாளாவது பாதசாரியாக இருப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும், அதன் மூலம் தேச, தேக ஆரோக்கியத்தை கூட்ட வேண்டும்.
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் மே 2023
Responsible Citizens iYakkam May 2023
Comments
Post a Comment